புதினங்களின் சங்கமம்

பேரூந்தை மெதுவாகச் செலுத்துமாறு கூறிய பயணியை துாசணத்தால் ஏசித் தாக்கிய நடத்துனர்!! வீடியோ

தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துநர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துநரே இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த நடத்துநர் பயணியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்கத் தொலைப்பேசிகளில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துநரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.