புதினங்களின் சங்கமம்

தனக்காக வாதாடிய பெண் சட்டத்தரணிக்கு தனது அந்தரங்க வீடியோவை அனுப்பிய குமார்!!

கம்பஹா நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் திலினி கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

பெண் சட்டத்தரணியினால் கணனி குற்றப்பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து, கம்பஹாவைச் சேர்ந்த எப்.குமார் என்ற சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாலியல் செயல்களில் ஈடுபடும் வெளிப்படையான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சட்டத்தரணிக்கு WhatsApp ஊடாக அனுப்பியதாக முறைப்பாட்டாளர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் இந்த சந்தேக நபர் ஒரு காலத்தில் சட்டத்தரணியின் வாடிக்கையாளராகவும், சந்தேக நபருக்காக கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.