வடிவேலு படப் பாணியில் CTB பஸ்சிலிருந்து கழன்று ஓடிய ஒரு சோடி ரயர்!! வீடியோ
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றின் பின்பக்க ஜோடி டயர்கள், பஸ்ஸை விட்டுவிட்டு 100 அடி தூரத்துக்கு உருண்டோடி புரண்டுகொண்டதுடன், டயருக்கு முன்பாக பின்பக்க டயர்கள் இன்றி நொண்டியடித்துக்கொண்டு ஓடிய பஸ், சுமார் 50 அடி தூரத்தில் நின்றுக்கொண்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.பதுளை ஸ்பிரிங்வலி வீதியில் ஸ்பிரிங்வேலியிலிருந்து பதுளை நோக்கிச் வியாழக்கிழமை (22) பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று முதலில் அச்சில் பின்பக்க டயர் ஜோடி கலந்து விபத்துக்குள்ளானது.
டயர்கள் கழன்றதன் பின்னர் பஸ் சுமார் 50 அடி முன்பாக ஓடி நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. கழன்ற டயர் ஜோடி 100 அடி தூரம் ஓடிசென்று நின்றுள்ளது.இந்த விபத்தால், இவ்வழியான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. விபத்து இடம்பெற்றபோது, அந்த பஸ்ஸில், 100க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இந்த பயணிகளில் பெரும்பாலானோர் பணி நிமித்தம் சென்றனர் என்பதுடன், சிலர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் எனவும் தெரியவந்துள்ளது.பேருந்து சாலையை விட்டு விலகியிருந்தால், பயணிகளுக்கும், வீதிக்கு கீழே உள்ள வீட்டிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கும்.