யாழில் இராணுவ முகாமுக்கு முன்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட பனைகளுக்கு தீ வைத்தது யார்?
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது
மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்
பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வடமராட்சி கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.