கொச்சிக்கடை சின்னத்தம்பியுடன் கள்ளக்காதல்;வலிக்காத மாதிரி எவ்வளவு காலத்துக்கு நானும் நடிப்பது.. மனைவி சுசீலாவை பெற்றோல் உற்றிக் கொன்றேன்!!
தனது மனைவியை பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்றதாகக் கூறப்படும் 41 வயதுடைய தேங்காய் பறிக்கும் தொழிலாளியான கணவர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ சிந்திராந்தி காலனியைச் சேர்ந்த 37 வயதுடைய தங்கவேலு ராஜலிங்கம் சுசீலா என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே பலத்த தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு வேலை செய்ய கணவனால் அனுப்பப்பட்டவர் எனவும், கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையுண்ட பெண்ணின் கணவர் வாடகைக்கு தென்னை மரம் ஏறுவது, தேங்காய் பறிப்பது போன்ற தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், சிந்திராந்தி காலனியில் தனது குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த அவர், வீட்டில் பொருளாதார நிலையில் இருந்து மீண்டு வர மனைவியை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலை செய்ய அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைக்கு சென்ற மனைவி, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற நபருடன் இரகசிய உறவை பேணி வந்ததாகவும், கள்ளக்காதலனான சின்னத்தம்பிக்கு தனது சம்பளத்தில் பாதிக்கு மேல் கொடுத்ததாகவும், கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பியதாகவும், கணவனே பிள்ளைகளை பராமரித்ததாகவும் சந்தேகநபரான கணவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. .
அந்த வாக்குமூலத்தில் சந்தேகநபர் மேலும் தெரிவிக்கையில், தனது மனைவி இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார். ஆனால் வென்னப்புவவில் உள்ள அவரது வீட்டிற்கு வராமல், கொச்சிக்கடையில் உள்ள அவரது கள்ளக்காதலனின் வீட்டிற்கு சென்று அவருடன் தங்கியுள்ளார். தமக்கு இது பற்றி தெரிந்திருந்தும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வலியை தாங்கியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி தனது மகனின் 14வது பிறந்தநாளுக்கு தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். மனைவியும் வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 14ம் திகதி காலை, கொச்சிக்கடைக்கு திரும்பி செல்ல விரும்புவதாக கூறியபோது, அவரை செல்ல வேண்டாம் என கணவர் கூறியுள்ளார்.
தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும் பிள்ளைகளின் நலன் கருதி வீட்டில் இருக்குமாறும் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், மனைவி பிடிவாதமாக, தான் செல்ல விரும்புவதாக கூறி வீட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, புல் வெட்டும் இயந்திரத்திற்காக வாங்கி வந்திருந்த பெற்றோலை மனைவியின் உடலில் வீசியதாகவும், அதே நேரத்தில் தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியை பற்றவைத்து வீசியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது தாயார் தீயில் எரிவதைப் பார்த்து அவரது 14 வயது மகன் எழுந்து அலறி துடித்தான்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணும் தீயை அணைக்க வீட்டைச் சுற்றி ஓடினார், அருகில் இருந்த கடையில் இருந்த ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து, அவரது 14 வயது மகனுடன் சேர்ந்து தீயை அணைத்தார்.
இருப்பினும், ஏற்கனவே பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதலில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் 17ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் 17 ஆம் திகதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அன்று மாலை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.