மட்டக்களப்பிலிருந்து சென்ற கார் மனம்பிட்டியில் விபத்து! வீடியோ
வியாழக்கிழமை (16) நள்ளிரவு மட்டகளப்பில் இருந்து கதுருவெலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று மனம்பிடிய ஆச்சி சந்தியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரும் பலத்த சேதமடைந்துள்ளது.



