முட்டாள் தமிழர்களின் தலைக்கு விலை பேசும் காரிய விசரனா அர்ச்சுனா?? லீக் ஆகிய ஓடியோ
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமை தவறி பணியாற்றி வந்த வைத்தியர்களின் செயற்பாட்டாலும், யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் முதல் சட்டவைத்திய அதிகாரிவரையானவர்களின் ஊழல், துஸ்பிரயோக நடவடிக்கைகளாலும், வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளின் அசண்டையீனமான செயற்பாட்டாலும், ஒரு தேவாங்கை தேவதை என நினைத்து கும்பிடும் அளவுக்கு அப்பாவி தமிழர்கள் வந்துள்ளது மிகவும் துர் அதிஸ்டவசமாகும்.
சிங்களப் பெண் ஒருவருடன் அர்ச்சுனா தொலைபேசியில் கதைத்த ஓடியோ ஒன்று லீக் ஆகி உள்ளது. நன்றாக சிங்களம் தெரிந்தவர்கள் இந்த ஓடியோவை கேட்டு கருத்தை கூறவும்… ஏற்கனவே இந்த ஓடியோவை கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்துக் கூறியவர்களில் இருந்து இருவரின் கருத்துக்களை இங்கு தந்துள்ளோம். ஒருவர் அர்ச்சுனாவுக்கு எதிரான கருத்தை கூறுகின்றார். இன்னொருவர் ஆதரவான கருத்தை கூறுகின்றார். அர்ச்சுனாவின் இந்த சிங்கள ஓடியோவை நன்றாக கேட்ட பின் உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.
இதே வேளை குறித்த ஓடியோ அந்தப் பெண்ணாலேயே லீக் ஆகியுள்ளது அர்ச்சுனாவின் பதிவிலிருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த ஓடியோ வெளியாகிய பின்னர் அதை சமாளிக்க அர்ச்சுனா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் நாம்ம் இங்கு பதிவு செய்துள்ளோம்.
Mynthan Shiva
இந்த குரல்பதிவை Record செய்ததும் அர்ச்சுனா. வெளியில் விட்டதும் அர்ச்சுனா. ஒலிப்பதிவை கவனமாக உற்றுக்கேளுங்கள். அர்ச்சுனாவின் குரல் போனில் record செய்யப்பட்டுள்ளது. மறுமுனையில் பேசுபவரின் குரல் தொலைபேசிக்குள் உள்ளே இருந்து கேட்கிறது. சிங்களம் எனக்கு வடிவாத்தெரியும். “என்னோடு பொதுவெளியில் தான் ஒப்பந்தம் பேசலாம். மறைமுகமான டீலுக்கு நான் தயார் இல்லை” என்பதை அர்ச்சுனா live video இல் சொன்னது ஏற்கனவே இருக்கு. இங்கே “டீல்” என்பது அர்ச்சுனா தனக்கு தனிப்பட்ட ரீதியில் காசு தா எண்டு கேட்பதாக அர்த்தம் இல்லை. தமிழ்மக்களுக்கு அனுர குமார என்னச்செய்வார்? என்ன ஒப்பந்தத்துக்கு (டீலுக்கு) வாறியள் என்பதே அதன் அர்த்தம் என மிகத்தெளிவாக இந்த Audio வை live Facebook இல் போட்டுக்காட்டி அர்ச்சுனா விளக்கம் கொடுத்துள்ளார். “அர்ச்சுனா அரசியல் கட்சிகளோடு டீல் பேசி கோடிக்கணக்கில் காசு வாங்கப்போறார்” என்பது கற்பனை வாதம். Facebook இல் 93K followers இருந்தால் சிங்களம் கோடிக்கணக்கில் டீல் பேசும் என்பதான உங்கள் தப்புக்கணக்கு சிரிப்புக்கு உரியது. சிங்களம் தெரிஞ்சவனுக்கு இந்த உரையாடலின் தெளிவான விளக்கம் புரியும். தெரியாதவர்களுக்கு “டீல்” பேசுவது போலத்தான் தெரியும். எனக்கு சிங்களம் வடிவாத்தெரியும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். அர்ச்சுனாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு நாங்கள் பேக்கொத்துகள் அல்ல! அர்ச்சுனாவுக்கு அரசியல் அறிவு இப்போதைக்கு பூச்சியம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இந்த “Audio” இல் நீங்கள் சொல்வது போல அதிர்ச்சியடைய ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
தமிழ்ப்பொடியன்