யாழில் விடுதியில் கஞ்சாவுடன் தங்கியிருந்தவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நபர் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர், கொழும்பை சேர்ந்தவர் எனவும், அவரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.