இங்கிலாந்தில் கீர்த்தனா பாலச்சந்திரனுக்கு நடந்தது என்ன? நடப்பது என்ன?
இங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில் முதல் ” மரபணு திருத்த சிகிச்சை ”
( gene – editing therapy) எமது தமிழ் மகளுக்கு புதிய எதிர்கால வாழ்வை கொடுத்துள்ளது .
இது மருத்துவ துறையில் புரட்சி தரும் திருப்புமுனை என இங்கிலாந்தின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு மனிதனின் குருதியில் உள்ள முக்கிய கூறு ” ஹீமோகுளாபின்” ஆகும்.
உடலில் ஒட்சிசன் கடத்தும் இதன் அளவு உடலில் இருக்க வேண்டியது அவசியமாகும். காரணம் சுவாசப்பையில் இருந்து உயிர் வளியை ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியை செய்கின்றது.
எனவே இதன் அளவில் குறைவு ஏற்படும்
போது ” blood disorder ” எனும் குருதிக் கோளாறு ஏற்படுகிறது.
இதற்கு ஆரம்பத்தில் அரிதான சிகிச்சை முறைகள் மட்டுமே இருந்தன.
அதாவது நோயாளியின் எலும்பு மஜ்ஜை
மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இதற்கு பொருந்த கூடிய அதே உயிரணுக்கள் தேவைப்படும்.
இனி விடயத்திற்கு வருவோம்…..
இதே பிரச்சினயை ” கீர்த்தனா ” எனும் தமிழ் மகள் அவரின் 3 மாத வயதில் சந்திக்க நேர்ந்தது.
( பொருந்த கூடிய உயிரணுக்கள் கொண்ட தேடுதல் தொடர்ந்தது …
எமது தொலைக்காட்சி மூலம் விசேட நிகழ்ச்சி ஒன்றை நானும் நடத்தினேன்)
காலம் ஓடி இன்று ” கீர்த்தனா ” அவரது 21 வது வயதில் மருத்துவ புரட்சி ஒன்றினால் புதிய சிகிச்சை மூலம்
அவரது மரபணு திருத்தம் செய்யப்பட்டு
புதிய நம்பிக்கை வாழ்வில் அடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த சிகிச்சை இங்கிலாந்தில் முதலில் இடம்பெற்ற ” gene – editing therapy ” என அறியப்படுகிறது.
இதைவிட ஓர் பெருமை தரும் மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.
அது, இவ்வளவு உபாதைகளின் நடுவில்
கல்வியை கைவிடாமல் கற்றது மட்டுமல்லாமல் மருத்துவ பல்கலைக்கழக பட்டம் பெற்று விரைவில் தன்னை வாழ வைத்த மருத்துவ உலகில் ஒரு ” டாக்டராக ” தானும் வரவுள்ளார் என்பதே.
இது கதையல்ல.. ஒரு குழந்தையின் இரண்டு தசாப்த வாழ்வின் உண்மைப்
போராட்டம்…
வாழ்த்துக்கள் டாக்டர் செல்வி கீர்த்தனா பாலச்சந்திரன்.
……………..NT Jegan …………