புதினங்களின் சங்கமம்

வைத்தியர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டும் வைத்திய உயரதிகாரி மீது திட்டமிட்ட பொய் பிரச்சாரம்!! முரளி கூறுவது என்ன?

வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதனின் சமூகவலைத்தளப் பதிவினை இங்கு தந்துள்ளோம்…

GMOA மாபியாவின் நோயாளிகளின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும் செயல்கள் அமபலப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த மாபியாவின் முகவர்கள் என்னை இலக்கு வைத்து பல பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து பாத்திரப் படுகொலை (character assassination) இல் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக முதுகெலும்பு அற்ற இவர்கள் முகநூலில் அனாமதேய profiles உருவாக்கி அவற்றின் மூலமாக எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
GMOA மாபியாவை சேர்ந்தவர்கள் சுகாதார திணைக்களத்தில் பல மட்டங்களிலும் இருப்பதனால் அண்மைக்காலத்தில் எனக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு என்னுடைய உத்தியோகபூர்வ நாட்குறிப்பை பரிசோதனைக்காக தூக்கி சென்றனர். அதன் பின்னர் நான் லீவு எடுக்காமல் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் அதனால் விசாரணையில் மாட்டிக்கொண்டதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது (இணைக்கப்பட்டுள்ளது )
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை நாட்களில் நான் ஒரு நாளுமே லீவு எடுக்காமல் வெளியே செல்லாததால் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. தங்களை போல் நானும் லீவு எடுக்காமல் கள்ள வேலை செய்து மாட்டிக் கொள்வேன் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெப்பே. கடைசியாக நான் வெளிநாடு சென்றபோது எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ லீவு அனுமதிக் கடிதத்தின் பிரதியையும் கீழ் இணைத்துள்ளேன்.
இந்த அனாமதேய profile மற்றும் பொய் பிரச்சாரம் யாரால் இயக்கப்படுகிறது என்பதை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். அதாவது இவர்களால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை பரிமாறுபவர்களும் (share ) போலியான profile இன் நண்பர்களுமே இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை . அதே நேரம் எங்களுடைய முகநூலில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காக எங்களுடைய நண்பர்களாகவும் முகநூலிலும் நிஜத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்
. பெரும்பாலும் கடந்த காலத்தில் என்னிடம் மாணவர்களாகவும் ஏனைய வழிகளிலும் உதவி பெற்று செய்நன்றி மறந்த உய்வில்லாதவர்களை பற்றி பேசி நமது பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது . .
எனது தற்போதைய நோக்கம்
1. சிந்துஜாவின் அநியாய சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்
2. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்
3.கவனக்குறைவால் ஏற்பட்ட சிந்துஜாவின் இறப்பு இறுதியான இறப்பாக இருக்கும் வகையில் தொகுதி மாற்றம் (system change ) கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த இலக்குகளை அடைவதற்காக பல மட்டங்களிலும் காய்களை நகர்த்துவேன். இடையில் இப்படியான எதிர்ப்புகள் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதும் அதை எதிர்கொள்வதும் எனக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு நாதரும் அல்ல.
ஆனால் நான் பழி வாங்கும் வகையில் குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகவும் மாட்டேன். முதுகெலும்பில்லாமல் அனாமதேய தாக்குதல்களிலும் ஈடுபடமாட்டேன்.
GMOA மாபியா முக்கியஸ்தர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் எத்தகைய பொய் பரப்புரைகளை மேற்கொண்டாலும் உங்களுடைய கர்மவினைக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
தற்காலிக இடமாற்றத்தில் வரும் வைத்தியர் 3 மாதமே அந்த வைத்தியசாலையில் வேலை செய்யமுடியும் என்பதுடன் அதன் பின் மீண்டும் அவரது முறையான இடமாற்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு செல்லவேண்டும். ஊர்காவல்துறை வைத்தியசாலைக்கு செல்லவேண்டியவர் தனது மாபியா அதிகாரத்தை பயன்படுத்தி மாதக்கணக்கில் யாழ் வைத்தியசாலையில் ஐஸ் அடிக்கிறார் . இவரது முன்னுதாரணத்தை பார்த்து சாவகச்சேரி உட்பட பல சிறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்லவேண்டியவர்கள் விதியை மீறி யாழ் வைத்தியசாலையில் தங்கி இருப்பதனால் சாவகச்சேரி வைத்தியசாலை உட்பட பல சிறு வைத்தியசாலைகளில் பல பிரிவுகள் மூடிக் கிடக்கின்றன என்பதுடன் நோயாளிகள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.
இவர்கள் எப்போது மனம் திருந்தி எடுக்கும் சம்பளத்துக்கு நேர்மையாக வேலை செய்வார்கள் என்பதை மக்களே கண்காணிக்க வேண்டும்.