கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த பாலியல் வல்லுறவுக் கைதி தவராஜ் தப்பி ஓட்டம்!!
தும்பர போகம்பர சிறைச்சாலையின் கைதி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பல்லேகல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்டன் பிரிட்ஜ், கலவத்தை, ஹெல்பொடவத்தை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து தவராஜ் என்ற 29 வயதுடைய கைதி, பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.