புதினங்களின் சங்கமம்

யாழில். வாடகைக்கு வீடுகளை எடுத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.