புதினங்களின் சங்கமம்

யாழ் ஹோட்டல் அறையில் கனடாவிலிருந்து வந்த 46 வயதான அன்ரியுடன் 27 வயது ஐயர் லீலை!! கோழிக்கறி, பியர் விருந்து!!

யாழில் உள்ள பிரபல ஹோட்டல் அறை ஒன்றில் நிறை வெறியிலிருந்த ஐயர் போதை தலைக்கேறி அட்டகாசம் செய்துள்ளார். இதனை அதே ஹோட்டலில் இன்னொரு அறையில் இருந்த புலம்பெயர் தமிழ்க்குடும்பஸ்தர் வீடியோ எடுத்ததற்காக குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டு அவரது தொலைபேசியும் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடா நாட்டில் இருந்து வந்து யாழில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 46 வயதான குடும்பப் பெண்ணுடன் குறித்த ஐயர் இரவிரவாக தங்கியிருந்துள்ளார். வலிகாமம் பகுதியில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றிலும் பாபா கோவிலிலும் இந்த ஐயர் பூசாரியாக கடமைசெய்பவர் எனத் தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த கனடாவிலிருந்து வந்திருந்த குடும்பப் பெண்ணை சந்திப்பதற்கு ஐயர் அந்த அறைக்குச் சென்றுள்ளார். அங்கு இரவு 11 மணியைத் தாண்டியும் அன்ரியுடன் சேர்ந்து பூசை செய்துள்ளார். அன்ரி தங்கியிருந்த அறைக்கு பல தடவைகள் மாமிச உணவுகள் ஹோட்டல் ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால் பியர் ரின்களை ஐயரே அறைக்கு கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது. ஐயரின் மாமிச விருந்தும் மது விருந்தும் தொடர்பாக அன்ரி தங்கியிருந்த பக்கத்து அறையில் இருந்த தமிழ்க்குடும்பம் ஒன்றிற்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் நட்புரீதியாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த அறையிலிருந்து குடும்பஸ்தர் அலேட்டாக இருந்ததாகத் தெரியவருகின்றது. அன்ரியின் அறையிலிருந்து கத்திக் குளறும் சத்தம் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய ஆணின் குரல் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்துள்ளது. இதையடுத்து தனது கைத்தொலைபேசியில் வீடியோவை இயக்கியவாறு அந்த அறையை தட்டியுள்ளார் அன்ரியின் அறைக்கு அருகில் இருந்த குடும்பஸ்தர். சிறிது நேரத்தின் பின் அன்ரியால் கதவு திறக்கப்பட்டது. நைற்றி ஒன்றின் மேல் ரீசேட் ஒன்றை அரைகுறைாக அணிந்தவாறு அன்ரி கதவைத் திறந்து்ளளார். ஐயரை அன்ரி பெட்சீட்டால் சுற்றி கட்டிலில் படுக்கவைத்துவிட்டே கதவைத் திறந்துள்ளார். ஆனாலும் ஐயர் அதை துாக்கி எறிந்துவிட்டு எழுந்து நின்றுள்ளார். அங்கு ஐயர் தலைகால் தெரியாத போதையில் நிர்வாணமாக நின்று கொண்டு துாசணவார்த்தைகளால் அன்ரியை உரக்கக் கத்தி வர்ணித்துக் கொண்டிருந்ததை வீடியோவாக குறித்த குடும்பஸ்தர் காட்சிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அன்ரிக்கும் குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டதாக் தெரியவருகின்றது.

குடும்பஸ்தரின் மனைவி குடும்பஸ்தரை தனது அறைக்கு இழுத்துச் சென்ற பின் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அன்ரி முறையிட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அன்ரியின் அறைக்கு அருகில் இருந்த குடும்பஸ்தரை ஹோட்டல் ஊழியர்கள் அழைத்த போது அறைக்கதவைத் திறக்காது இருந்துள்ளனர். மாற்றுச் சாவியைக் கொண்டு குடும்பஸ்தரின் அறையைத் திறந்து குடும்பஸ்தர் காட்சிப்படுத்திய வீடியோக்களை அழிக்குமாறு ஹோட்டல் ஊழியர்கள் கோரிய போது அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அத்துடன் குறித்த குடும்பஸ்தரின் யாழ்ப்பாண நட்புகள் சிலரும் இரவிரவாக ஹோட்டலில் வரத்தொடங்கியுள்ளனர். இதனையடுத்த குறித்த ஹோட்டல் முதலாளிக்கு நெருக்கமான பொலிஸ் உயரதிகாரி ஒருவரரும் இன்னும் சில பொலிஸ்காரர்களும் சிவில் உடையில் வந்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் அவரது நட்புக்களை அச்சுறுத்தி குடும்பஸ்தரின் தொலைபேசியைக் கைப்பற்றி வீடியோக்களை அழித்துள்ளதுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என கடும் எச்சரிக்கை செய்ததுடன் குடும்பஸ்தர் மற்றும் இருவரை தம்முடன் அழைத்துச் சென்று காலை 8 மணியளவிலேயே அவர்களை மீண்டும் ஹோட்டலுக்கு செல்ல அனுமதித்ததாகத் தெரியவருகின்றது.

இதற்கிடையில் குறித்த ஐயர் அதிகாலை 3 மணியளவில் அரைகுறை ஆடைகளுடன் ஹோட்டலை விட்டு ஓடித்தப்பியதாக குறித்த ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐயர் நிர்வாண நிலையில் நின்ற காட்சிகள் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள குறித்த குடும்பஸ்தர் வெளிநாடு சென்ற பின் அதனை ஊடகங்களுக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.