புதினங்களின் சங்கமம்

சீனாவில் உண்ணியால் பரவும் மற்றுமொரு வைரசால் பலர் மரணம்!! (Photos)

சீனாவின் வுஹான் சந்தையில் தோன்றியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸை உலகெங்கிலும் உள்ள மக்கள் இன்னும் சமாளிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் உலகம் COVID-19 உடன் போராடுகையில், ஒரு புதிய தொற்று நோய் சீனாவில் பரவி வருவதாகத் தெரிகிறது.

இந்த நோய் ஒரு உண்ணியால் பரவும் வைரஸால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் சீனாவில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

மனிதனுக்கு மனிதன் பரவும் வாய்ப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 க்கும் மேற்பட்டோர் ஆண்டின் முதல் பாதியில் SFTS வைரஸால் பாதிக்கப்பட்டனர்; கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் மேலும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் ஊடக அறிக்கைகளை மேற்கோளிட்டுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டினார். அவரது உடலில் குலுகோசைட், மற்றும் குருதி சிறுதட்டுகளின் எண்ணிக்கை சரிவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு மாத சிகிச்சையின் பின்னர், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.

Image may contain: one or more people and close-upImage may contain: one or more people