புதினங்களின் சங்கமம்

யாழில் நொண்டி நொண்டி வீதியில் சென்றவனை நம்பி வாள் முனையில் மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த அப்பாவி!!

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

அதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொண்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டியை வெட்ட முயன்றுள்ளார்.

அதற்கு இளைஞன் எதிர்ப்பு காண்பிக்க , வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.