யாழிலிருந்து கண்டி சென்ற இரவுப் பேரூந்தில் பல்கலைக்கழக மாணவிகளுடன் சில்மிஷம் செய்த சிங்களவன்!! வீடியோ
பேரூந்துகளில் செல்லும் இளம்பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்களின் செயற்பாடுகள் நாடுமுழுவதும் பதிவாகிவருகின்றது. இந்த வகையில் கடந்த 16ம் திகதி யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றில் பயணித்த இரண்டு பல்கலைக்கழக தமிழ் மாணவிகளிடம் சில்மிஷம் புரிந்த நபர் தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன. இரவுப்பயணத்தின் போது தனது விரல்களை ஆசனங்களுக்கு அருகில் கொணர்ந்து குறித்த பல்கலைக்கழக மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இடையில் குறித்த மாணவிகள் எழுந்து அவரை எச்சரித்த போதும் ஏனையவர்களுக்கு கூறிய போதும் நடத்துனர் உட்பட பேரூந்தில் பயணித்த எவரும் எந்த சம்பவம் தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என குறித்த மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தென்னிலங்கை பகுதியைச்சேர்ந்த சிங்கள மொழிபேசுபவர் எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் பதிவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.