யாழில் நண்பிக்காக வங்கியில் கடன் வாங்கிய குடும்பப் பெண்!! பேஸ்புக்கில் பதிவு செய்து தற்கொலை!!
அல்வாய் வடக்கு பகுதியில் தனது நண்பி ஒருவருக்கு வங்கியில் கடன் பெற்று கொடுத்து ஏமாந்த மூன்று பிள்ளைகளின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் .
குறித்த பெண் தனது மரணத்துக்கு விஜிதரன் கல்யாணி தான் என்று பதிவு செய்து விட்டு அச்சுவேலி பகுதியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற குறித்த பெண் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
குறித்த இரு பெண்களும் உறவினர்கள் என்றும் உயிரிழந்த பெண் தனது பெயரில் வங்கியில் கடனைப் பெற்று விஜிதரன் கல்யாணி என்ற பெண்ணுக்கு வழங்கியுள்ளார்.
குறித்த பெண் நீண்டகாலமாக பணத்தை மீள செலுத்தமைனால் மனமுடைந்த பெண் தனது முகநூலில் தனது மரணத்துக்கு காரணம் விஜிதரன் கல்யாணி என்றும் தனது மூன்று பிள்ளைகளையும் விட்டு செல்லுகின்றேன் என்று பதிவு செய்து விட்டு சில மணி நேரத்தில் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வகீசன் கோமலா வயது 33 என்ற மூன்றுபெண் பிள்ளைகளின் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இச் சம்பவம் அச்சுவேலி பகுதியில் இடம் பெற்றுள்ளது சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன