முல்லைத்தீவில் ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் உறவு வைத்த 15 சிறுமி!! உறவு வைத்த 3 பிள்ளையின் தந்தையும் கைது!!
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி வைத்திய சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சென்றவேளை முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனையில் குறித்த சிறுமி ஆண்களுடன் உறவு கொண்டமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த முறைப்பாட்டினை ஏற்று நடவடிக்கையினை மேற்கொண்ட முள்ளியவளை பொலீசார் சிறுமியுடன் உறவினை வைத்த காதலனை தேடி வலைவிரித்துள்ளதுடன் உறவு வைத்த மற்றை குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.