புதினங்களின் சங்கமம்

யாழில் மருத்துவ மாபியாக்களுடன் சேர்ந்து கொண்ட சட்டத்துறை மாபியாக்கள்!!

பிரசாத் அவர்களின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
அர்ஜுனனால் மட்டுமே வடக்கு மருத்துவ மாபியா விடயத்தை கொண்டு வர முடிந்தது. வேறு எந்த கொம்பனாலும் முடியாது. அதை அவர் சேதமாக்கிக் கொண்டார்.
ஒரே விதமாக கருத்துகளை வைக்காமல் போனதாலும் , மசாலா பேச்சாலும் , சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது. இவர் யாரோட ஆள் என சனம் குழம்பி போகும் அளவுக்கு , அவரது தேவையற்ற அலட்டல்கள் ஆக்கிவிட்டது.
அர்ஜுனனின் தழும்பல் நிலை காரணமாக ஆளாளாளுக்கு தங்கள் அரசியலை வளர்க்க திரித்து பேச ஆரம்பித்துள்ளார்கள். அவருக்கு ஆதரவாக இருப்போரை விட எதிரிகள் பலமானவர்களாக உள்ளனர். அதுவும் தமிழ் புத்திசீவிகள் .
சிலர் அர்ஜுனனை வைத்து , வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளை தனியார் செக்டருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்கிறார்கள். அரச வைத்தியசாலைகளில் 50 வீதத்தை தனியாருக்கு கொடுத்தால் , இந்த ஊழலில் பாதிக்கு மேல் குறையும். வேலை நேரத்தில் மருத்துவ ஊழியர்கள் நினைத்த மாதிரி செயல்பட முடியாது. இவை விரிவாக பேச வேண்டிய வேறொரு விடயம்.
அடுத்தது புலம் பெயர் தமிழர் பணத்தை முதலீடு செய்ய அர்ஜுனனை அரசு பாவிக்க போவதாக ஒரு பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். அதிகாரம் இல்லாமல் அதை செய்யக் கூடாதாம் , அரசு பறித்துக் கொண்டு துரத்திவிடுமாம். புலம் பெயர்ந்த அநேகர் சொத்து வாங்கியிருப்பதே சிங்கள பகுதியில்தானே? அதை பறிக்க மாட்டார்களோ?
அரசு நினைத்தால் இந்தியா – சீனா போன்ற நாடுகளை , வடக்கு மருத்துவ துறையில் 50 சதவீத முதலீடு செய்ய சொன்னால் வரிசையில் நிற்பார்கள். சிலரது அரசியல் இன்னமும் 1958 அரசியல்தான்?
சில பிரபல தமிழ் தேசிய சட்டத்தரணிகள் , அர்ஜுனனை சிறையில் அடைக்க ஏன் முயல்கிறார்கள்? அவர்கள் இந்த மருத்துவ மாபியாக்களின் பங்காளரா?
போதை கடத்தல்காரர்களை காப்பது போல , இவர்கள் மருத்துவ மாபியாக்களை காக்கிறார்களா?
பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம்
– ஜீவன்