Home புதினங்களின் சங்கமம் திருகோணமலையில் கலியாண வீட்டுக்குச் சென்றவர்களுக்கு நடந்த அலங்கோலம் இது!!

திருகோணமலையில் கலியாண வீட்டுக்குச் சென்றவர்களுக்கு நடந்த அலங்கோலம் இது!!

திருமண வீடொன்றில் உணவு உட்கொண்ட 24 பேர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை, தக்வா நகர் பகுதியில் நேற்று மதியம் திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, வாந்தி பேதி காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாகவும், அவர்கள் தற்பொழுது புல்மோட்டை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.