சாராயக் கடையில் வைத்து லைவ் வீடியோ!! சாவகச்சேரி மக்களை மடையர்களாக்கி விசர்க் கூத்தாடிய அருச்சுனா!! வீடியோ
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து தானே தற்போதும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி என கூறி, அங்கிருந்த வைத்தியசாலையின் புதிய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தி, அந்தக் கதிரையில் இருந்து பின்னர் அங்கிருந்து வெளியேறினான் வைத்தியர் அருச்சுனா. வெளியேறிய அர்ச்சுனா சாராயக்கடை ஒன்றினுள் புகுந்து பியர் ஒன்றை ஓடர் செய்த பின் ஒன்லைன் லைவ் கதைக்கும் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடீயோவில் தான் வடக்கு, கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளின் முன்னேற்றத்திற்கான திட்டமிடல் அதிகாரி என்ற புதிய புலுடா ஒன்றை விட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான். இவனது செயற்பாடுகள் அனைத்தும் போலித்தனமாக உள்ளதை இவனது தொடர்ச்சியான வீடியோக்கள் மற்றும் பதிவுகளில் இருந்து அவதானிக்க கூடியதாக உள்ளது. இவன் மக்களையும் ஊடகங்களையும் தொடர்ச்சியாக முட்டாள்களாக எண்ணி ஏமாற்ற முற்பட்டால் இவர் தொடர்பான உண்மைத்தன்மைகளை ஆய்வு செய்ய வேண்டியது ஊடகவியலாளர்களின் முக்கிய பணியாகும்.
அதற்கு முன் இவன் தொடர்ச்சியாக பேஸ்புக்கில் பதிவுகள் இடுவதை இவனுக்கு பின்னால் உள்ள அரசியல்தலைமைகள் நிறுத்தி இவனது மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவகச்சேரி வைத்தியசாலை உட்பட இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் நடைபெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் பெரும்பாலான வைத்தியர்கள் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு தொண்டாற்றி வருபோது சில வைத்தியர்களின் கேவலமான நடவடிக்கைகளும் மக்களுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் மத்தியில் இருந்த இந்த விரக்தியை ஆயுதமாக எடுத்து அருச்சுனா வெளியிட்ட வீடியோ மக்களிடம் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அர்ச்சுனா என்பவன் ஒரு அலங்கோலம் பிடித்தவன் என்பது போகப் போக மக்களுக்கு விளங்கும்….
அத்துடன் புலம்பெயர் மக்கள் இவனது இந்தப் போலியான வீடியோவை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம்.
;