யாழில் பெண் என நினைத்து வடிவேலு பாணியில் அலியை கடத்தியவர்கள் கைது!!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பினைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த திருநங்கை நேற்று முன்தினம் ஊர்காவல்துறை பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை மூவர் அவரை வாகனத்தில் ஏற்றி ஆட்களற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு “இங்கே ஏன் வந்தாய்” என அந்த திருநங்கையை வினவியவேளை ஊர்காவல்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிவித்து இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் வழங்கினார்.
இதனையடுத்து இளைஞனுக்கு கும்பல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட வேளை, அவரின் தொலைபேசி இலக்கம் குறித்த இளைஞனிடம் ஏற்கனவே இருந்திருந்தது.
குறித்த மூவரையும் பொலிஸார் இன்றையதினம் கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.