புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட இளைஞனும் உதவி புரிந்த தாயும் கைது!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவரை காதலித்த 22 இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனையும் அவரது தாயாரையும் இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிக்கு தந்தை இல்லை எனவும் தாயார் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் சிறுமி உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மே மாதம்  குறித்த சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்கவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவதினமான இன்று சிறுமியை அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞனையும், அதற்கு உடந்தையா இருந்த அவரது தாயையும் கைது செய்த பொலிஸார், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x