புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு நிசானி யாழில் 2வது கணவனால் குத்திக் கொல்லப்பட்டது ஏன்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வசித்து வந்த 29 அகவையுடை நிசானி என்ன இளம் குடும்ப பெண் யாழ்ப்பாண்த்தில் வைத்து இரண்டாவது கணவனால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 06.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் கடந்த காலத்தில் கடமையாற்றிய நிலையில் இராணுவத்தினை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஒரு பிள்ளை உள்ள நிலையில் அந்த இராணுவத்தினர் ஏற்கனவே திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து பிரிந்து வந்த நிலையில் மற்றும் ஒருவரை திருமணம் செய்து ஒரு பிள்ளை உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்ந்து வந்துள்ளது.

இவர்கள் உடையார் கட்டு – மூங்கிலாறு தெற்கில் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரண்டாவது கணவனுடன் யாழ் கொழும்புத்துறை ஆனந்தவடலி பகுதியில் வசித்து வந்த நிலையில் குடுத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கணவன் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறன பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள், இவர்களின் குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் தவறான முடிவுகளுக்கு காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது,

இவ்வாறன சம்பவங்களை குடும்பங்களின் பின்னணிகளை இனம் கண்டு அவர்களுக்கான உளநல ஆற்றுகையினை மேற்கொள்ளவேண்டியது அரச மற்றும் அரச சார்பற்ற சமூக மட்ட அக்கறை கொண்ட திணைக்களங்களின் கடமையாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x