வட பகுதி கல்வியிலும் கடும் ஊழல்!! 5 ஆயிரம் தந்தால் மாத்திரமே பரீட்சை பெறுபேறு!! கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் நடந்த டீல் இதோ!!
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தர பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.
இன் நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாள் காயத்திரியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.