புதினங்களின் சங்கமம்

கஜேந்திரகுமார் எம்பிக்கு கடுமையான புற்றுநோய்!! நாடாளுமன்றத்தால் 3 மாத லீவு!!

கடுமையான புற்றுநோயால் சுகயீனமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்றையதினம் (02-07-2024) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x