யாழில் பலரையும் முகம் சுழிக்க வைத்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து!!
யாழ்.நகரின் பிரபல பெண்கள் கல்லூரியொன்றிலிருந்து மாணவிகளை ஏற்றிவந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியில் அதிகளவு புகையை கக்கியவாறு சென்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரிலிருந்து பலாலி பிரதான வீதியூடாக வயாவிளான் வரை 768 இலக்க வழித்தடத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்திலிருந்தே மேற்படி புகை கிளம்பியுள்ளது. குறித்த பேருந்து நிறுத்தப்படும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு புகை கிளம்பியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகில் பொலிஸார் நின்ற போதும் குறித்த பேருந்து தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென பொதுமக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
{எஸ்.ரவி-}

