யாழ் வசிக்கும் 17 வயதுச் சிறுமியை பேஸ்புக் காதலன் உட்பட்ட 3 பேர் வாகனத்திற்குள் வைத்து பாலியல் உறவு?? சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன 17 வயதான மாணவி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் வசிக்கும் 17 வயதான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு சென்றவேளை காணாமல் போனதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

<

மாணவி பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

மாணவிக்கு பேஸ்புக் மூலம் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

பேஸ்புக் காதலன் தன்னுடன் வாகனத்தில் வருமாறு கூறிய போது, வாகனத்திற்குள் மேலும் இரண்டு இளைஞர்கள் இருந்ததால் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறுமியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக, மாணவியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வைத்து சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தற்போது மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)