புதினங்களின் சங்கமம்

யாழ் ரயில் நிலையத்துக்கு அருகில் 25 வயது சீன யுவதியுடன் ஆட்டோக்காரன் திருவிளையாடல்!!

இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும். அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.

கொழும்பிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க சீன நாட்டு யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் வந்தார். அவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு முன் கொழும்பில் தங்கியிருந்த அவரது நண்பர்கள் சில புத்திமதிகளை கூறினார்கள். யாழ்ப்பாண ஆட்டோக்களில் கண்டபடி ஏற வேண்டாம். கிரகாதர்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பார்கள். ஆட்டோவில் ஏறுவது என்றால் மீற்றர் பூட்டிய ஆட்டோவை பார்த்து ஏறு என சீன யுவதிக்கு கூறியிருந்தார்கள்.

சீன யுவதியும் யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் வந்து சேர்ந்தார். ஏற்கனவே நண்பர்கள் கூறிய புத்திமதியை காதில் வாங்கியிருந்த சீன யுவதி யாழ் ரயில் நிலையப்பகுதியில் மீற்றர் பூட்டிய ஆட்டோவை தேடினார். அங்கு நின்ற பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒன்று மட்டுமே மீற்றர் பூட்டியிருந்தது. உடனே அந்த ஆட்டோவில் ஏறிவிட்டார்.

ஆட்டோக்காரன் “எங்கே போக வேண்டும்“ என யுவதியை கேட்டான். யுவதியும் “யூஎஸ் ஹோட்டலுக்கு போக வேண்டும்“ என கூறினாள். அத்துடன் “இலங்கை ரயில்கள் மிகவும் வேகம் குறைந்து செல்கின்றது. எங்கள் நாட்டில் ரயில் மிக வேகத்துடன் செல்லும்…. இப்படியான ஆட்டோக்கள் சீனாவில் கிடைக்காது… ஏனெனில் சீனாவில் கார்கள்தான் அதிகம்.. கார்களும் வேகம் கூடிய கார்கள்தான் இருக்கின்றது” என ஆட்டோக்காரனு்ககு கூறியபடி ஆட்டோவில் ஏறினாள்.

ஆட்டோவுட் யூஎஸ் ஹோட்டலுக்கு விரைந்தது. ஒரு நிமிடத்திலேயே யூஎஸ் ஹோட்டலுக்கு ஆட்டோ சென்றுவிட்டது. சீன யுவதி ஆட்டோக்காரனுக்கு நன்றி சொல்லிய பின் எவ்வளவு கட்டணம் என கேட்டாள். ஆட்டோக்காரன் 10 கிலோ மீற்றர் ஆட்டோ சென்றுள்ளது. 1000 ரூபா தாருங்கள் என கேட்டான்…. சீன யுவதிக்கு மயக்கம் வராத குறை… ”இந்த ஓட்டை ஆட்டோவில் ஒரு நிமிடத்தில் 10 கிலோ மீற்றர் வந்தாயா? யாரிடம் கதை விடுகிறாய்?” என சண்டை பிடிக்கத் தொடங்கினாள்…

யாழ்ப்பாண ஆட்டோக்காரர்கள் பற்றி சீன யுவதிக்கு கொஞ்ச விசயம்தானே அவளது நண்பர்கள் கூறியிருந்தார்கள். யாழ்ப்பாண ஆட்டோக்காரர்கள் எப்படியானவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்த விடயம். சீன யுவதிக்கு அவன் என்ன கூறினான் தெரியுமா?

ஹலோ… என்னுடைய ஆட்டோ ஓட்டை ஆட்டோதான்… ஆனால் மீற்றர் ஒறிஜினல் சீனத் தயாரிப்பு… வேகமாகத்தான் மீற்றர் ஓடும்” என கூறியுள்ளான்….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x