புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாத கோபம்!! 6 வயது மகளுக்கு அசிற் பருக்கிய சிங்களவன்!!

ஹம்பாந்தோட்டையில் வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை துப்புரவு செய்யும் திரவத்தை (Toilet cleaner) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பசத்தில் ஹம்பாந்தோட்டை ஹுங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அவ்வேளையில் அதி குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார்.

கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா? என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x