புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (24.06.2024)

மேஷம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் ஒற்றுமை பெருகும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

எதிர்பார்த்த சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

தனுசு

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் பிரச்னைகள் வரக்கூடும். விழிப்புணர்வு தேவைப்படும்

மீனம்

திட்டமிட்ட காரியங்கள் கை கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். ஆன்மிக பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x