Home புதினங்களின் சங்கமம் மன்னாரில் மனைவியுடன் சண்டையிட்ட எல்லாளன் தற்கொலை!!

மன்னாரில் மனைவியுடன் சண்டையிட்ட எல்லாளன் தற்கொலை!!

இலங்கையின் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது.குறித்த நபர் நேற்று(17) பகல் 12.40 மணியளவில் தனது வயல் நிலத்திற்குச் சென்று நஞ்சருந்திய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.குடும்பத்தில் ஏற்பட கருத்து முரண்பாடு காரணமாக குடும்பஸ்தர் உயிரிழந்ததக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.