புதினங்களின் சங்கமம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!!

முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்தியா – ராமேஸ்வரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு சிறுவன், ஒரு சிறுமி உட்பட ஆறு பேரே ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீசார் அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.