யாழ். சுப்பர்மடம் பகுதியில் வாள்வெட்டு – ஆறு பேர் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சியின் சுப்பர்மடம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் வீதியில் பணித்த ஒருவருக்கும் கிராமத்தினைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை கலப்பாக மாறியுள்ளது.
சம்பவத்தை அடுத்து அயல் கிராமத்திலிருந்தும் சிலர் சுப்பர் மடத்துக்கு வந்து அங்கு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதனை அடுத்து இரண்டு தரப்பும் வாள்வெட்டில் ஈடுபட்டதில் இரு தரப்பிலும் தலா மூவர் என்ற அடிப்படையில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

