யாழ் -பருத்தித்துறை 750 CTB பஸ் சாரதி, நடத்துனர்களின் திருவிளையாடல்கள்!! கள்ளக்காதலர்களுக்கு சப்போட்!!
யாழ் – பருத்தித்துறை வழியே பயணிக்கும் CTB பஸ்கள் பருவகால ரிக்கட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றார்கள். குறிப்பாக மாலை வேளைகளில் யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் CTB பஸ்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது. ஆனால் குறித்த பஸ்களின் மாஸ் போட்டபடி காதலர்கள், கள்ளக்காதலர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து லீலைகள் புரிவதாகவும் அதற்கு குறித்த பஸ் நடத்துனர்கள் ஆதரவு கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த கள்ளக்காதல் ஜோடிகள் பஸ்சை மறித்தவுடன் பஸ் நின்று அவா்களை ஏற்றிச் செல்வதாகவும் ஆனால் பருவகால ரிக்கட் வைத்துக் கொண்டு நிற்கும் பயணிகள் குறிப்பாக அரச ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை குறித்த பஸ்கள் ஏற்றாது செல்வதாகவும் பயணிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செல்லும் பஸ்களின் நடத்துனர், சாரதி போன்றோரின் புகைப்படங்களையும் பயணிகள் எமக்கு அனுப்பியுள்ளார்கள். தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை குறித்த பஸ் சாரதி, நடத்துனர் மேற்கொண்டுவந்தால் அவர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களும் வெளியிடப்படும்.

