புதினங்களின் சங்கமம்

யாழில் யுவதியை நசுக்கிக் கொன்ற இராணுவ வாகனம்! வீடியோ

யாழ்ப்பாணத்தில் பிறந்த நாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person, scooter, bicycle and grass

May be an image of 1 person and smilingMay be an image of 2 people