கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த நண்பனைக் கொடூரமாகக் கொலை செய்த கார்த்திக்கும் பாலாஜியும்!! நடந்தது என்ன?

வேலூரில் நண்பர்கள் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தபோது மறுப்பு தெரிவித்த வாலிபரை கொடூரமாக கொலை செய்து தண்டவாளத்தில் தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (30). இவர் தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் பாலாஜி என்பவர்களுடன் கடந்த மே மாதம் 13 ஆம் திகதியன்று அப்பகுதியில் உள்ள நாற்றம்பள்ளி என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்குவைத்து, கார்த்திக் மற்றும் பாலாஜி ஆனந்தை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஆனந்த்

இதனால், மிகுந்த ஆத்திரமைடைந்த கார்த்திக்கும், பாலாஜியும், ஆனந்தை கழுத்தை நெரித்து கொலைசெய்து தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

இந்நிலையில், தண்டவாளத்தில் சடலம் கிடந்ததை வைத்து தற்கொலை என்ற விதத்தில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை ஆனந்தின் செல்போனை சோதனை செய்து பார்த்ததில், அவர் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் பாலாஜியுடன் அதிகநேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இருவரையும் விசாரணை செய்த பொலிசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, முன்னுக்கு பின் முரனாக பதிலளித்த கார்த்திக்கையும், பாலாஜியையும் பொலிசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொள்ளவே அவர்கள் இருவரும், ஆனந்தை தாங்கள் தான் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.