புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் மக்களிடையே பதற்றம் !!(Photos)

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள வீதி ஒன்றினை அடைப்பதற்கு முற்பட்ட பொது குறித்த பகுதியில் மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொழும்புத்துறை பிரதான வீதியில் இருந்து நெடுங்குளம் செல்வதற்காக இவ் வீதி சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இவ் வீதியினை மூடுமாறு சில குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதும் பெரும்பான்மையான மக்கள் இவ் வீதியினை மூடுவதற்கு தனது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இவ் வீதியினை மூடுவதற்கு யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் வருகை தந்த போது மக்கள் தனது எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

குறித்த வீதி தமது சொந்த காணிக்குள் இருப்பதாகவும் , இதனால் இவ் வீதிக்கு கதவு போடுவதற்காகன ஏற்பாடுகளை மேற்கொன்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக பெருமளவான மக்கள் முற்பட்டிருந்த போது குறித்த இடத்திற்கு, வீதிக்கு கதவு போடுவதற்கு முற்பட்ட மக்களும் போராட்டத்தை மேற்கொள்வதற்காக வந்திருந்தனர்.

இதனால் அவ் இடத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீதியினை மூடுவதற்கு எதிப்பு தெரிவித்த மக்கள் இவ்வாறு தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.