புதினங்களின் சங்கமம்

கலியாணம் இல்லாமல் அலையும் யாழ் டொக்டர்மார்?? யாழ் மாநகரசபை இளம் பெண் உத்தியோகத்தர்கள் குறிவைக்கப்டுகின்றார்களா?

யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கிளைகள் உள்ளதாக நோட்டீஸ் அடித்து கலியாணப் புறோக்கர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனம் யாழ் மாநகரசபைக்கு முன் உள்ள ஆலமரத்திற்கு அருகில் பாரிய விளம்பரங்களை ஒட்டியுள்ளது. குறித்த விளம்பரங்கள் மாநகரசபை மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலும் ஒட்டியிருந்தாலும் மாநகரசபைக்கு முன்பே அலங்காரமாக ஒட்டியுள்ளது. அந்த விளம்பர பிரசுரங்களில் டொக்டர் ஒருவருக்கு படித்த பெண் தேவை என்பதையே முதன்மைப்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண டொக்டர்மாருக்கு பெண் கிடைப்பது அவ்வளவு கஸ்டமாகப் போய்விட்டதா? என பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். யாழ் மாநகரசபையில் படித்த அழகான பெண்கள் இருக்கின்றார்கள் என கருதி குறித்த கலியாணப் புறோக்கர் நிறுவனம் அந்த நோட்டீசை ஒட்டியுள்ளார்களா? என மாநகரசபையில் பணியாற்றும் திருமணமாகாத ஆண் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

யாழ்ப்பாண கல்யாணச்சந்தையில் மிகவும் மதிப்புக்குரிய மாப்பிளை அந்தஸ்தில் இருப்பவர்கள் டொக்டர் மாப்பிளைகள்தான். அதற்குப் பின்னரே ஏனைய மாப்பிளைகள் பார்க்கப்படுகின்றார்கள். இந் நிலையில் டொக்டர் மாப்பிளைகளுக்கே இந்த நிலை என்றால் எங்களைப் போன்ற சாதாரன உத்தியோகத்தர்களுக்கு எப்போது பெண் கிடைக்கும் என்று யாழ் மாநகரசபையில் உள்ள திருமணமாகாத கன்னி ஆண்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.