புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் கடும் பதற்றம்!! கன்னியாவில் அகத்தியர் அடிகளார் மீது சுடுதண்ணீர் ஊற்றிய சிங்களவர்கள்!! (Video)

தென்கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்க வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

பௌத்த தேரர்களால் ஆட்சி அதிகாரம் கட்டுப்படுத்தப்படும் சிறிலங்காவில் சைவத்தமிழ் ஆதீன முதல்வர் ஒருவர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இச்சம்பவம் குறித்து ஒட்டுமொத்த பௌத்தர்களும் வெட்கித் தலைகுனியவேண்டும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொலிஸாரின் பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மதகுரு ஒருவர் மீது அநாகரிக சம்பவம் இடம்பெற்றபோது சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யாத பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இன, மத நல்லிணக்கம் எனக் கூறி ஆட்சி நடத்துகின்ற சிறிலங்காவில் தமிழர்களுக்கு எப்போதும் உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்பதையே இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.

தமிழர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்ற சிங்களப் பேரினவாதம் நீதி கேட்கச் சென்றவரை நிந்தித்த செயலை தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

ந.பொன்ராசா
பிரதேசசபை உறுப்பினர்
வலி.மேற்கு.

Image may contain: one or more people, people standing, sky, cloud and outdoorImage may contain: one or more people, crowd, sky and outdoor

Image may contain: 12 people, crowd and outdoorImage may contain: one or more people, people standing, sky, cloud and outdoor

Image may contain: 8 people, crowd, shoes and outdoorImage may contain: 1 person, crowd, tree and outdoorImage may contain: 11 people, crowd and outdoorImage may contain: 7 people, crowd and outdoorImage may contain: 2 people, crowd and outdoorImage may contain: one or more people and outdoor

அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீர் ஊற்றிய சிங்களவர்கள்! களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் :

திருகோணமலை – கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த நிலையில் திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அதிகளவிலான மக்கள் கூடி இருகின்றனர். எனினும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் வீதியும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகத்தியர் அடிகளார் முகத்தில் சிங்களவர்கள் சுடுநீர் ஊற்றியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவவிடத்திலிருந்து இது தொடர்பான முழுமையாக காணொளி .. கீழே..