புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பஸ்சில் கொண்டு வரப்பட்ட கசிப்பு பிடிபட்டது எப்படி?

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக பேருந்தை மறித்து பொலிஸார் சோதனை செய்தனர்.
இதன்போது 45 லிட்டர் கசிப்புடன் சந்தேகநபர் இருவரை கைது செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிசார் அவரையும் துரத்தி பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

இரண்டு துசந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.