வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து.. மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய காட்சி!
வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ் மீசாலைப் பகுதியில் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்திய நிலையில் வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

