புதினங்களின் சங்கமம்

யாழில் முன்னாள் புலி. போராளி சிவதாஸ் (குட்டி) விபத்தில் பலி!!

வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சிவதாஸ் (குட்டி)
கடந்த மாதம் வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிசை பயனளிக்காது உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் அரசியல் பிரிவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றி 2009 ஆண்டு முள்ளிவாக்கால் இறுதி யுத்தத்தின் முடிவில் பிரான்சு நாட்டில் அகதி அந்தஸ்ட் கோரிய நிலையில் அவை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிக்குள் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 2 people, beard and people smiling