யாழில் 60 km வேகத்தில் பொலிஸ் நிலையத்தின் முன் மிதிவண்டியில் பயணித்த இளைஞன்!! கவனிப்பார் யார்? வீடியோ
நேற்று சனிக்கிழமை ( 06.04.2024 ) இரவு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தின் முன்பக்கத்தினூடாக மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்த தனது நண்பர்களுடன் தனது கைகளை இறுகப் பிணைத்தபடி மணிக்கு 60 km வேகத்தில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞன்…இவ்வாறான வீதி ஒழுங்குமுறைகளை மீறிய சட்டவிரோதச் செயற்பாடுகள் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தி வீதியில் செல்லும் அப்பாவிகளின் உயிருக்கு உலைவைக்கக் கூடியவையாகும். சைக்கிளோட்டிகளும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் மிகவும் சன நெருக்கடிமிக்க பிரதான வீதிகளிலேயே இரு வாகனங்களையும் கைகளால்பிணைத்தோ வேறு வகையிலோ அதி வேகத்தில் ஒன்றாக வேகச் சவாரி செய்வது யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக அடிக்கடி நிகழ்கின்றன ! எங்கே பிழையிருக்கிறது ?