புதினங்களின் சங்கமம்

யாழில் வித்தியாசமான கள்ளக்காதல்!! 39 வயதான 2 பிள்ளைகளின் தாயுடன் ஓடிய 24 வயது இளைஞன்! தேடிச் சென்ற பெற்றோருக்கு கூறியது என்ன?

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 2 பிள்ளைகளின் தாயாரான 39 வயதான குடும்பப் பெண்ணுடன் காதல் வசப்பட்டு, மட்டக்களப்புக்கு ஓடிச்சென்ற 26 வயதான இளைஞனை குடும்பத்தினர் தேடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்டத்தரிப்பு நகரிலுள்ள புடவையகம் ஒன்றில் பணியாற்றும் 26 வயதான இளைஞனே, அதே பகுதியை சேர்ந்த 39 வயதான குடும்பப் பெண்ணுடன் தலைமறைவானார்.

அவர் பணியாற்றும் புடவையகத்தில் ஆடை வாங்க வரும் போது, அந்த பெண்ணுக்கும், இளைஞனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சில காலம் காதலித்த நிலையில், அண்மையில் வீடுகளில் சொல்லாமல் தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவான ஜோடி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரையண்டிய பகுதியொன்றில் தங்கியிருக்கும் தகவலறிந்த இளைஞனின் குடும்பத்தினர், வாகனத்தில் அங்கு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட இடமொன்றில் பல மணித்தியாலங்களாக காவல் நின்று, அந்த இளைஞன் வர்த்தக நிலையத்தில் பொருள் வாங்க வந்தபோது, வழிமறித்துள்ளனர். தம்முடன் வருமாறு குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இளைஞன், தனது காதல் தேவதையுடனே வாழ விரும்புவதாகவும், என்ன முடிவெடுப்பதென்றாலும் காதல் தேவதையுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டுமென்றார்.

காதலியிருக்கும் இடத்துக்கு போகலாமென தீர்மானித்த குடும்பத்தினர், இளைஞனையும் ஏற்றிச் செல்ல முற்பட்டனர். எனினும், இளைஞன் அதற்கு சம்மதிக்கவில்லை. எல்லோரும் சென்றால் காதலி பயந்து விடுவார் என்றும், யாராவது ஒருவர் மாத்திரம் தன்னுடன் வரலாமென்றும் நிபந்தனை விதித்தார்.

இதன்படி குடும்ப உறுப்பினர் ஒருவர், இளைஞருடன் அவரது இருப்பிடம் சென்றார்.

காதலனை பிரிந்து வாழ முடியாதென 39 வயதான காதலி ஒரேயடியாக கூறிவிட்டார். தாம் 2 வருடங்களாக காதலிப்பதாகவும், அந்த 2 வருடங்களில் கணவருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்கவில்லையென்றும் கூறியுள்ளார்.

இளைஞர், குடும்பத்தினருடன் செல்ல மறுத்ததையடுத்து, குடும்பத்தினர் ஏறாவூர் பொலிசாரிடம் சென்று முறைப்பாடளித்தனர். எனினும், உரிய பராயமடைந்தவர்களின் காதல் விவகாரத்தில் தலையிட சட்டம் அனுமதிக்காததை பொலிசார் சுட்டிக்காட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.