புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டி கொலையில் முடிந்தது!! 30 வயது குடும்பஸ்தர் பற்றிஸ் குத்திக் கொலை!!

கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் பலியாகியு்ளார். கிளிநொச்சி, தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற மெய்வள்ளுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு திரும்பி சென்ற பொழுது, வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் பல தடவைகள் பலமாக குத்தப்பட்ட 30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் 30 வயதுடைய குடும்பஸ்தரே தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்காகி பலியான இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தருமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தர்மபுரம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person and textMay be an image of 5 peopleMay be an image of 1 person, clothes iron and hospitalMay be an image of 1 person, clothes iron and hospital