பேஸ்புக் ஊடாக இயக்கத்தை மீள உருவாக்க முயற்சி!! வவுனியாவில் அரவிந்தன் கைது!!
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டி வவுனியாவில் நேற்ற (26) ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரவிந்தன் என்பவரே நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். பேஸ்புக் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயன்றதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

