”கூட்டித் துடைக்கிறேன் தமிழ் கடையில சாமான்கள் அடுக்கிறேன்….”விசிட் விசாவில் கனடா போனவர் கவிதையில் புலம்பியது என்ன?
கனடா வாழ் உறவின் புலம்பல்…..படித்ததை பகிர்ந்து கொண்டேன்.
எங்கட மச்சான் என்னைக்
கூப்பிட்டவர்
விசிட்டர் விசாவில…
காப்ரேட் கம்பெனியில் கொழும்பில நல்ல வேலையில் இருந்தனான்-இப்ப
வீட்டுக்கு அடி பேஸ்மென்டில இருக்கிறன் வெலிகடைச்
சிறை போல…
மச்சானும்
தங்கையும்
எங்கோ கச்சான் கடையில வேலை செயினம்…
ஐயோ மானம் போகுது…
கனடா மாப்பிள்ளை எண்டு தான் கட்டி வச்சவை தங்கச்சி ஆசைப்பட்டாள் எண்டிட்டு..
இங்க வந்து
பார்த்தாத்தான் தெரியுது வெளிநாட்டுத் திரவியம்…
வந்த முதல் நாள்
நல்ல முகத்தோடு சிரிச்சவை.
மூன்று நாள் போனதும் ஏதோ முணு முணுக்கினம்
மூலைக்கு மூலை நிண்டு..
மூதேசி இன்னும்
வேலை வெட்டி தேடாம வீட்டுக்குள்ளே இருக்குது எண்டு..
விடியப் போகினம்
இரவு வருகினம்
இரவு போகினம்
விடிய வருகினம்….
சாப்பாடு Takeout
நாலு நாள் காணுமாம்
நல்லாச் சூடாக்கிச் சாப்பிடச் சொல்லிட்டுப் போகினம்…
இன்றோடு ஒரு மாதம் இங்க நான் வந்து..
என்ர மனுசி எடுத்தவ call கொழும்பில இருந்து .. அப்பா எங்கட AC work பண்ணுது இல்லை
புதுசு வாங்குவம் போடுங்கோ காசு எண்டு..
பக்கத்தி வீட்டுப்
பரிமளம் அக்கா கேட்டவ -இப்ப
உங்கட புருஷன் கனடா தானே..
உங்களுக்கு என்ன…
இனி ஓகோ வாழ்க்கை எண்டு….
AC வானில் driver வச்சு easyயாய் ஹாயாய் திரிந்தனான்..
மச்சான் அனுப்பிய ஓசிக் காசில…
கடைசி
வரையும்
நான் கனவிலும் நினைக்கல
கனடா வருவன்
இப்பிடி கஷ்டப்படுவன் எண்டு..
கோப்பை கழுவுறேன்
கூட்டித் துடைக்கிறேன்
தமிழ் கடையில சாமான்கள் அடுக்கிறேன்….
பேப்பர் போடுறேன்
சுப்பர் ஸ்டோர்ல
துண்டு மடிக்கிறேன்…
என்னோட சேர்ந்து எங்கிட ஊர் இஞ்சினியர்,அதிபர், வாத்தியார், இலங்கை வங்கி மேனேஜர்,AGA, GS எல்லாரும் இது தான்..
சும்மா இருந்து சுதியாய்த் சுத்தித் திரிந்த நான்..
வெளிநாட்டு மோகத்தில
சீதன வீட்டையும் வித்து விதானை
வேலையும் விட்டு
இப்ப இங்க நடு ரோட்டில நிக்கிறன்….
எங்கிட மச்சான் invite பண்ணினவர் என்னை “canada”
விசிட்டர் விசாவில..!!!
(பிறரின் ஆதங்கத்தை சுட்டுப் பகிர்வதிலும் ஒரு அலாதிப்பிரியமாக்கும்….)

