Home புதினங்களின் சங்கமம் யாழில் செல்வநிதியை அடித்துக் கொன்ற கணவன்!! புகைப்படங்கள்

யாழில் செல்வநிதியை அடித்துக் கொன்ற கணவன்!! புகைப்படங்கள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவரே தாக்குதல் நடத்தியுள்ளார் என சந்தேகம் நிலவுகின்றது.தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்பவரே உயிரிழந்தார்.

இதே வேளை இவர் கணவரால் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

No photo description available.May be an image of 8 people, tree and crowdMay be an image of service vehicle, van, golf buggy, motorcycle and textMay be an image of 4 people