யாழ் பொன்னாலை கடற்படை வாள் வெட்டுக் குழுவுடன் சேர்ந்து இயங்கியதா? விசாரணை நடக்கின்றதாம்!! வீடியோ
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து தம்பதிகள் கடத்தப்பட்ட போது கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து, வாள்வெட்டு குழுவுக்கு கடற்படையினர் உதவினார்களா என்ற கேள்வியெழுந்துள்ள நிலையில், இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை தீர்மானித்துள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர், கப்டன் கயான் விக்ரமசூரிய இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர், சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை பொன்னாலைச் சந்தியில் கடற்படைச் சாவடிக்கு அருகில் தம்பதிகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக கடந்த 11 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட பிறகு குறித்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்நிலையிலேயே, கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

